Published Date: September 10, 2024
CATEGORY: CONSTITUENCY
நூலகங்கள் திறப்பு:
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுத்தலின் அடிப்படையில் ஒத்தக்கடை பகுதியில் தி.மு.க இளைஞரணி சார்பில் மதுரை கிழக்கு தொகுதிக்கான கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டது. அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார். இதைப் போன்று எஸ்.எஸ். காலனி பகுதியில் அமைக்கப்பட்ட நூலகத்தையும் திறந்து வைத்தார். விழாக்களில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் ரகுபதி பாலாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Media: DAILYTHANTHI